மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் வாயை அடைக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.திருவாரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவாரூர் மைய நூலகத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக பிரதமர் மற்றும் ஆளுநரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு சட்டரீதியான போராட்டத்தில் முதல்வர் ஈடுபட்டு கொண்டிருப்பதாக கூறினார். மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் வாயை அடைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அதற்குப்பின் மாணவர்களிடமிருந்து எதையும் பெற முடியாது என்றும் தெரிவித்தார்.தெரிந்து கொள்ளுங்கள்குழந்தைகள் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.புகார் எண்பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி புகார் தெரிவிக்கக்கூடிய எண்ணை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் பள்ளி வளாகத்திற்குள் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மன ரீதியான பிரச்சனைதமிழகம் முழுவதும் 412 வட்டங்களுக்கு வட்டத்திற்கு 2 மருத்துவர்கள் என மாணவர்களை கண்காணிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டும் மாணவர்களின் மன ரீதியான பிரச்சனைகளை ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அரவணைத்து செல்லும் முதல்வர்ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக் கூட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளன. அதன் பிறகு எந்தெந்த இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தார். .
No comments:
Post a Comment