Income tax துறையில் AI : இனிமேல் no refund - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, July 23, 2025

Income tax துறையில் AI : இனிமேல் no refund

 களமிறக்கப்பட்ட ஏஐ.. வருமான வரி ITR தாக்கல் செய்பவர்களுக்கு இனி refund கிடைக்காது?


சென்னை: வருமான வரி தாக்கல் சீசன் முழு வீச்சில் இருக்கும் நிலையில், சம்பளம் வாங்கும் தனிநபர்கள் முதல் வணிக உரிமையாளர்கள் வரை அனைவரும் தங்கள் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். வருமான வரித் துறையில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. தற்போதுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி வரி விலக்கு கோரிக்கைகளை தீவிரமாக ஆராய்கிறது. அதாவது தவறாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி விலங்குகளை ஆராய ஏஐ கருவிகளை பயன்படுத்தி வருகின்றன.


வருமான வரிக் கணக்குகளில் மோசடியான விலக்குகள் மற்றும் சலுகைகளை கோருபவர்களை குறிவைத்து, நாடு தழுவிய சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை நேற்று தொடங்கியது.


 income tax ITR


இந்த நடவடிக்கை, சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான விலக்குகளுக்கு மட்டுமல்லாமல், உடல்நலக் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A), கல்வி மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான விலக்குகளையும் உள்ளடக்கியது (பிரிவு 80E, 80EE மற்றும் 80EEB) என்று CBDT தெரிவித்துள்ளது. மேற்கண்ட விலங்குகளை பயன்படுத்தி பொய்யாக ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களை சோதனை செய்ய, அவர்களுக்கு refund வழங்காமல் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 களமிறக்கப்பட்ட ஏஐ


இப்படிப்பட்ட நிலையில்தான் வருமான வரித் துறையில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. தற்போதுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி வரி விலக்கு கோரிக்கைகளை தீவிரமாக ஆராய்கிறது. அதாவது தவறாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி விலங்குகளை ஆராய ஏஐ கருவிகளை பயன்படுத்தி வருகின்றன.


இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு, டிடிஎஸ் (Tax Deducted at Source) தரவு, வங்கி பதிவுகள் மற்றும் பிற விரிவான ஆதாரங்கள் உட்பட பல தரவு ஆதாரங்களை சோதனை செய்யும். இந்த அதிநவீன அமைப்பு, வருமான வரி அறிக்கையில் (ITR) தெரிவிக்கப்பட்டுள்ள வருமான புள்ளிவிவரங்களுக்கும் AIS (Annual Information Statement) மற்றும் Form 26AS இல் காணப்படும் புள்ளிவிவரங்களுக்கும்

வேலைவாய்ப்பு செய்திகள் 2025
இடையே உள்ள முரண்பாடுகளை உடனடியாக கண்டறிந்து, சாத்தியமான பிழைகள் அல்லது மோசடி முயற்சிகளை சுட்டிக்காட்டுகிறது.


குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த நான்கு மாதங்களில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர். இருப்பினும், பலர் இன்னும் இணங்கவில்லை, ஒருவேளை இந்த மோசடி கும்பல்களின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கிறதா என்றும் விசாரணைகள் செய்யப்பட உள்ளன...


No comments:

Post a Comment