தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 2024-25 கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அதற்கான முடிவுகள் மே 8 ஆம் தேதி அன்று வெளியானது. இதை தொடர்ந்து, மாணாக்கர்கள் உயர்கல்வி கற்க கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், சிலர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 41 கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை சம்பளம் பெறலாம்”.
“இந்த பதவிக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என்றும், இதுவே MBC/ OBC/ EBC/ BCM பிரிவினராக இருந்தால் 3 ஆண்டுகளும், SC பிரிவினராக இருந்தால் 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை எனவும், விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்புக்கு மே 22, 2025 முதல் ஜூன் 21, 2025 வரை https://recruitment.py.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment