ரெட்மி நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் நவம்பர் 20-ம் தேதி இந்தியாவில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவர உள்ளது. இப்போது இந்த போனின் முழு விவரங்களையும் பார்க்கலாம்.
ரெட்மி ஏ4 5ஜி அம்சங்கள் (Redmi A4 5G Specifications): 6.88 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ்
Click here to more government orders
ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (Snapdragon 4s Gen 2) சிப்செட் உடன் இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு HyperOS 1.0 skin சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. எனவே இந்த போன் உதவியுடன் அருமையான படங்களைப் பதிவு செய்ய முடியும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.
குறிப்பாக 5160mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), டூயல் ஸ்பீக்கர்கள், டூயல் 5ஜி சிம் ஆதரவு, புளூடூத் 5.1, டூயல் பேண்ட் வைஃபை 5, என்எப்சி, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவரும்.
குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்
ஆன்லைனில் வெளியான தகவலின்படி,

No comments:
Post a Comment