TNPSC GROUP 4 EXAM எழுதுபவர்கள் கவனத்திற்கு - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, June 8, 2024

TNPSC GROUP 4 EXAM எழுதுபவர்கள் கவனத்திற்கு

நாளை (ஜூன். 9) தமிழகத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில் , தேர்வு எழுத செல்வோர் தேர்வு மையங்களுக்கு எந்த நேரத்தில் செல்ல வேண்டும், வினாத்தாள் மற்றும் OMR SHEET எவ்வாறு கையாள வேண்டும், தேர்தல் மையத்தில் பின்பற்ற வேண்டியவை, பின்பற்றக் கூடாதவை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. TNPSC தேர்வு : தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வுகளை தமிழக அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியானது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்பட்டன. குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்பதுதான். ஆனாலும் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர் கல்வி தகுதி பெற்றவர்கள் உள்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை 09.06.24 அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு எழுத சொல்லும் நபர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள் பற்றி முழுமையாக கூறப்பட்டுள்ளது . வினாத்தாள் மற்றும் OMR SHEET : தேர்வு மையத்திற்கு 8.00 -8.30 மணிக்குள் செல்ல வேண்டும். சலுகை நேரம் : 9.00 மணி. OMR விடைத்தாள் 9.00 மணிக்கு வழங்கப்படும். வினாத்தொகுப்பு 9.15 க்கு வழங்கப்படும். 9.30 க்கு தேர்வு தொடங்கும். OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும். OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல் எழுதவும். OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க வேண்டும். OMR ல் எக்காரணம் கொண்டு whitener பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும். OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும். தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டியவை : நுழைவுச்சீட்டு (Hall ticket), கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4, அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID) தேர்வின்போது பின்பற்ற வேண்டியவை : .அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல் வேண்டும். நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது முக்கியம். சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்த அனுமதி.

 


DIGITAL கடிகாரம் தவிர்த்தல் வேண்டும். சாதாரண ஆடை அணிந்து செல்லவும். நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும். தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும். தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும். பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாள வேண்டும்.

No comments:

Post a Comment