21 பட்டப்படிப்புகள் அரசுப்பணிக்கு உகந்தது அல்ல - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 16, 2023

21 பட்டப்படிப்புகள் அரசுப்பணிக்கு உகந்தது அல்ல

 


நாட்டின் பல் வேறு பல்கலைக்கழகங்கள் சார் பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகு திக்கு இணையற்றவையாக அறி விக்கப்பட்டுள்ளன.


உயர் கல்வித் துறை தகவல்


தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உயர்கல்வியில் பல் வேறு புதிய படிப்புகளை பல்க லைக்கழகங்கள் அறிமுகம் செய் கின்றன. இவற்றில் எந்தெந்த பட்டப் படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை உயர்கல்வித் துறை வெளியிட்டு வருகிறது.


அதன்படி, பல்வேறு பல்கலைக்

கழகங்கள் சார்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவை யாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இது குறித்து தமிழக உயர்கல் வித் துறை செயலர் தா.கார்த்திகே யன் வெளியிட்ட அரசாணை விவ ரம்: 'கோவை தொழில்நுட்பக் கல் லூரி வழங்கும் எம்.எஸ்சி., பயன் முறை (அப்ளைடு) வேதியியல், பாரதியார் பல்கலை.. திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. யின் எம்.எஸ்சி., ஆர்கானிக் வேதியியல், திருச்சி நேஷனல் கல்லூரி  எம்.எஸ்சி., பகுப்பாய்வு வேதியி யல், பனாரஸ் ஐஐடி மற்றும் வாரா ணசி இந்து பல்கலை. வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதியி யல், பாரதிதாசன் பல்கலை.யின் யல், பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்சி., வாழ்க்கை அறிவியல் ஆகியவை எம்.எஸ்சி., வேதியி யல் தகுதிக்கு இணையானவை


இவர்களால் எம்.எஸ்சி., வேதி யியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடி யாது. அதேபோல், சென்னைப் பல்கலை. வழங்கும் பி.காம்., கார்ப்பரேட் செக்ரட்ரஷிப், அழ கப்பா பல்கலை.யின் எம்.காம்., கார்ப்பரேட் செக்ரட்ரஷிப் ஆகி யவை அதன் மூலப் படிப்புகளான பி.காம்.,எம்.காம்.,ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல.


மேலும், கோவா பல்கலைக்க ழகம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ் வரா பல்கலை. மற்றும் பெங்க ளூரு பல்கலை. வழங்கும் பிஏ., ஆங்கிலம் அரசுப் பணிக்கான கல் வித் தகுதிக்கு இணையாக கருதப்படாது.இதுதவிர திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்., தகவல மைப்பு மற்றும் பயன்பாடு (பகு திநேர) படிப்பானது எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கும், விஐடி பல்கலை.யின் எம்.எஸ்சி., மின் னணுவியல் படிப்பு, எம்.எஸ்சி., இயற்பியலுக்கும் இணையான தல்ல.


அழகப்பா பல்கலை.யின் பி.எஸ்சி.,மின்னணுவியல் படிப்பு, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் பிஎஸ்.சி., அறிவி யல் ஆகியவை அரசுப் பணிக்கான பி.எஸ்சி., இயற்பியல் கல்வித் தகு திக்கு இணையாக ஏற்கப்படாது.


மேலும், பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.


இதேபோல், 'புதுவை பல்கலை. உள்பட பல்வேறு உயர்கல்வி நிறு வனங்கள் அறிமுகம் செய்துள்ள 20 படிப்புகள் அரசுப்பணிக்கு ஏற் றவை' என்று மற்றொரு அரசா ணையில் உயர்கல்வித்துறை தெரி வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment