தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து தானாக ரூ.20 எடுக்கிறார்களா.. அப்படியென்றால் இதுதான் காரணம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, January 1, 2023

தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து தானாக ரூ.20 எடுக்கிறார்களா.. அப்படியென்றால் இதுதான் காரணம்


உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாக 2 ரூபாய் கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலும் வங்கி கணக்கில் உள்ள தொகையை, வரவு செலவுகளை அவ்வபோது அனைவரும் கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் ஒரு சிலர் தங்களது வங்கி கணக்கில் ரூபாய் 20 தானாக கழிந்திருப்பதை கண்டுபிடித்திருப்பார்கள். அது எதனால் என்பது தெரியாமல் இருக்கும் நிலையில் சிலர் வங்கி நிர்வாகத்தை அணுகி விளக்கம் கேட்டு இருப்பார்கள். அந்த வகையில் உங்களுக்கு தானாக ரூ.20 கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பொது மக்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டில் இரண்டு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது . அதில் ஒன்று பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, இன்னொன்று பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஒரு விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் விபத்து காரணமாக ஏற்படும் ஊனத்திற்கு காப்பீடு வழங்குகிறது. இது ஒரு வருட காப்பீடாக இருக்கும். ஆண்டுதோறும் இதனை புதுப்பிக்க வேண்டும். இந்த காப்பீடு திட்டத்திற்காக ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான ஒரு வருட காலப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் முழு வருடாந்திர பிரீமியத்தை செலுத்த வேண்டும். வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் பிரிமியம் தொகையான ரூ.20 ஆட்டோ டெபிட் மூலம் கழிந்துவிடும். இந்த திட்டத்திலிருந்து வெளியேற விரும்பும் அந்த ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வங்கிக்கு எழுத்துபூர்வமாக தகவல் அளித்தால் அவர்களது காப்பீடு திட்டம் நிறுத்தப்படும். இதற்காக, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்துடன் உங்கள் கணக்கு இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பிரீமியம் கட்டணத்தை நிறுத்துமாறு கோரலாம். மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் தேவையான நிதி இல்லை என்றால், பிரீமியத்தை தானாக டெபிட் செய்வது சாத்தியமில்லை என்பதாலும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment