பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகைக்கு (Fresh applications) விண்ணப்பித்தல் சார்ந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 22, 2022

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகைக்கு (Fresh applications) விண்ணப்பித்தல் சார்ந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவிகளின் குடும்ப ஆண்டு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.


மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டில் புதியது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவியர்கள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லதுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்-16) அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மேற்படி 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.044-29515942 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment