தமிழ்நாடு அரசாணை 152; பீதியில் உறைந்த வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள்! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 22, 2022

தமிழ்நாடு அரசாணை 152; பீதியில் உறைந்த வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள்!

 தமிழக அரசு மனிதவள மேம்பாட்டு துறை கடந்த அக்டோபர் 18ம் தேதி வெளியிட்ட அரசாணை நிலை எண் 115 தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ‘தமிழ்நாடு அரசு மனிதவள மேம்பாட்டு துறை கடந்த அக்டோபர் 18ம் தேதி வெளியிட்டு இருக்கும் அரசாணை நிலை எண்.115 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு, காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினரின் மனதில் குழப்பம் மற்றும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த அரசாணையில் காலி பணியிடங்கள் அதிகளவில் உள்ள அதேவேளையில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓர் இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம் என கூறியுள்ளது.

 

 

மனித வளம் தொடர்பான சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த திட்டத்தை 6 மாத கால அளவிற்குள் முன்மொழிவதற்கான மனிதவள சீர்த்திருத்த குழு அமைக்கப்படும் என, தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசியதைபோல 5 பேர் அடங்கிய மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அரசாணையில் கூறப்பட்டு உள்ளது’ என குற்றம்சாட்டி இருந்தது. 

மேலும் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை கேட்டறிந்த முதல்வர், ‘எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன் பணியாளர் சங்கங்களின் கருத்துகளை கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும்’ என தெரிவித்ததோடு, இந்த குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்து இருந்தார். 

 

 

இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் ஊழியர்கள் பணி இடங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை (அரசாணை எண் 152) சமீபத்தில் வெளியிட்டது. 

 

 

இதை கண்டித்தும், தமிழக அரசின் இந்த அரசாணை எண் 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

 

 

அரசாணை எண் 152 ஐ அமல்படுத்தினால் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆணையாளர், பொறியாளர், மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டுமே தமிழக அரசின் வசம் இருக்கும். 

மீதம் உள்ள பணியிடங்கள் தனியாரிடம் தான் ஒப்படைக்கப்படும். மாநகராட்சிகளில் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறி உள்ளபோதிலும் நாளடைவில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படியாகவே இந்த திட்டம் உள்ளதாக ஊழியர்கள் கருதுகின்றனர். 

 

 

மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான நிரந்தர பணியிடங்கள் முழுமையாக தனியார் வசம் செல்லும் என்பதோடு இந்த திட்டமானது தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர். 

இந்நிலையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை 152 தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக குற்றம் சாட்டி சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுசுகாதாரம், குடிநீர் வழங்கல் பிரிவு, வரிவதல், தெருவிளக்கு பராமரிப்பு உள்பட பல ஆயிரக்கணக்கான மாநகராட்சியின் பணியிடத்தை தமிழ்நாட்டில் உள்ள 20 மாநகராட்சிகளின் (சென்னை நீங்கலாக) பணியிட பட்டியலில் இருந்தே அரசாணை 152 நீக்கியுள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. 

 

 

 

மேலும் இனி தூய்மைப்பணி, ஓட்டுநர், தூய்மைப்பணி மேற்பார்வையாளர், செயல் திறனற்ற பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளை எல்லாம் அவுட் சோர்சிங் மூலமே செய்ய வேண்டும் என அரசாணை 152 குறிப்பிடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. 

எனவே தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வரும் அடித்தட்டு மக்களுக்கும், படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும் இழைக்கப்படும் சமூக அநீதி எனக் கூறி கண்டன கோஷம் எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருமே ‘பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால வாழ்வையே அரசாணை எண் 152 சீரழிக்கிறது’ என வேதனையுடன் குற்றம்சாட்டினர். 


No comments:

Post a Comment