அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இவ்வளவு கம்மி விலைக்கு இத்தனை அம்சங்களா? - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 5, 2022

அறிமுகமானது ஜியோ லேப்டாப்! இவ்வளவு கம்மி விலைக்கு இத்தனை அம்சங்களா?

 யூஎஸ்பி 2.0 போர்ட், யூஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் ஹெச்டிஎம்ஐ ஆகிய போர்ட்களுடன் ஜியோ தனது லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 

ரூ.19,500க்கு லேப்டாப்பை அறிமுகப்படுத்திய ஜியோ.
பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக பயனர்கள் மகிழ்ச்சி.
பலர் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது அந்நிறுவனம் விலை மலிவான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை அரசு இ-மார்க்கெட்பிளேஸ் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஜியோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 11.6 இன்ச் நெட்புக் என பட்டியலிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.19,500 ஆகும்.  ஜியோவின் இந்த லேப்டாப்பானது முன்னரே சந்தையில் விற்பனைக்கு வந்த போதிலும் இதனை எல்லா மக்களாலும் வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது, ஏனெனில் அரசாங்கத் துறைகள் மட்டுமே GeM போர்ட்டல் வழியாக ஷாப்பிங் செய்ய முடியும். அதனால் இதனை மற்றவர்களால் வாங்க முடியாமல் போனது. 
ஆனால் இப்பொழுது இந்த லேப்டாப் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வரப்போகிறது, தீபாவளி பண்டிகை சமயத்தில் இது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அரசாங்க இ-மார்க்கெட்பிளேஸ் இணையதளத்தில் இந்த லேப்டாப்பின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 665 ஆக்டா-கோர் மூலம் இயக்கப்படுகிறது, மெட்டாலிக் ஹிங்கிஸ் உள்ளது மற்றும் சாஸ்ஸிஸ் ஏபிஎஸ் பிளாஸ்டிக்கால் உருவானது.  இந்த ஜியோ லேப்டாப் 2ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம்-ஐ கொண்டுள்ளது, ரேம் 32ஜிபி இஎம்எம்சி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 11.6 இன்ச் ஹெச்டி எல்இடி பேக்லிட் ஆன்டி-க்ளேர் டிஸ்ப்ளே உள்ளது மற்றும் 1366x768 பிக்சல்கள் ரிசல்யூஷனை கொண்டுள்ளது.
யூஎஸ்பி 2.0 போர்ட், யூஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் ஹெச்டிஎம்ஐ ஆகிய போர்ட்களுடன் வருகிறது ஆனால் இந்த லேப்டாப்பில் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் இல்லை, அதேசமயம் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.  இதில் புளூடூத் 5.2 வெர்ஷனுடன் வருகிறது மற்றும் வயர்லெஸ் இணைப்பு வைஃபை 802.11ac ஆல் ஆதரிக்கப்படுகிறது.  மேலும் இந்த லேப்டாப்பில் 4ஜி மொபைல் பிராட்பேண்ட் இணைப்பு, இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்களுடன் வருகிறது.  ஒரு வருட உத்திரவாதத்துடன் கூடிய இந்த லேப்டாப் 55.1-60Ah பேட்டரி திறனுடன் 8 மணி நேர பேக்கப் கிடைக்கிறது மற்றும் இதன் மொத்த எடை 1.2 கிலோவாகும்.

No comments:

Post a Comment