மருத்துவரான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள்! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, September 6, 2022

மருத்துவரான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள்!

 நான் Dr.! நான் Dr.! நான் Dr.!  வேர் ஸ் மை பேசன்ட்? வேர் ஸ் மை பேசன்ட்?


எந்தவித படிப்போ - முறையான அடிப்படை மருத்துவப் பயிற்சியோ இல்லாமல் தமிழ்நாட்டு ஆசிரியர்களை ஒரே நாளில் Multi Speciality மருத்துவரைப் போல அங்கீகரித்துள்ள பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு  கவலையளிப்பதாகவே உள்ளது.


Anemia

Cleft Lip

Cleft Palate

Cyanosis

Congenital Heart Disease

Dental Caries

Flurosis

Vitamin C deficiency

Angular Stomatitis

Candidiasis Low immunity

Thyroid

Tuberculosis

Muscular Dystrophy

Congenital Talepus

Urinary track infection

Vitamin D deficiency

Attention Deficit Hyperactive Disorder

Leprosy

Refractive Errors

Cataract

Glaucoma

Amblyopia

Strabismus

& etc Eye related Diseases


உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சுமார் 40-ற்கும் மேற்பட்ட நோய்-அறிகுறிகளை மாணவ மாணவியரிடம் சோதித்து App-ல் ஏற்றும் பணி தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இதில் சில வெளிப்படையாகத் தெரியக்கூடியதுதான் என்றாலும், குறிப்பிட்ட துறை சார் மருத்துவர்கள் மட்டுமே சில அறிகுறிகளைச் சரியாக உறுதிப்படுத்த இயலும். அதனால் தான் பொது மருத்துவம் மட்டுமின்றி தலைமுடி முதல் பாதம் வரையிலான ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒவ்வொரு துறை என பல்வேறு வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன.


ஆனால், இது குறித்த எவ்வித அடிப்படை மருத்துவ அறிவும் இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களை மருத்துவ ஆய்வு செய்வது என்பது பேராபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.


ஆம். இது வெறும் வெளிப்புற அறிகுறிகளைக் கண்டறிவது தான் என்றாலும். . . ஒரு தவறான முடிவு நாளை ஒரு குழந்தைக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவியை தடுத்துவிடக் கூடும்.


முன்பெல்லாம், பள்ளிகளுக்கு மருத்துவ அலுவலர்கள் நேரில் வந்து சோதித்து பிரச்சினை இருப்பின் உரிய துறை மருத்துவருக்குப் பரிந்துரைப்பதே வழக்கமாக இருந்தது. மருத்துவ வசதியில் வளர்ந்த மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளைச் சோதிப்பதற்கு மட்டும் மருத்துவர் பற்றாக்குறை வந்துவிட்டதா? ஒருவேளை பற்றாக்குறை இருப்பின் தேவைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மாணவர்களைக் கூட பயன்படுத்தலாமே!


ஆனால், அதையெல்லாம்விடுத்து ஆசிரியர்களைக் கொண்டு உடற் பரிசோதனை செய்து App-ல் ஏற்றுங்கள் என்பது அறிவியல் வளர்ச்சி மனிதனை மருத்துவத்திற்கு அப்புறப்படுத்துகிறதோ என்ற எண்ணம்தான் வருகிறது.


மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்து வாங்குவது / விற்பது குற்றமெனில், முறையான அடிப்படை மருத்துவ அறிவு இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு நோய் அறிகுறிகளைப் பரிசோதிப்பது குற்றமாகாதா?


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு உட்பட்டுத்தான் இது நடத்தப்படுகிறதா? ஆம் எனில், இதுதான் திராவிட மாடல் மருத்துவக் கொள்கையா?


ஒரு ஆசிரியராக APP-ல் ஏற்ற சிரமப்பட்டு நாங்கள் இதை கேள்விக்குட்படுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் தேவையோ இல்லையோ Obey the order என்று பலவற்றை Online-ல் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். இதையும் அவ்வாறு செய்துவிட்டு நகர மனமில்லாது, எமது குழந்தைகளின் மீதான உண்மையான அக்கறையிலேயே கேட்கிறோம்.


தயை கூர்ந்து மருத்துவத் துறையைப் பயன்படுத்தி மாணவ மாணவியர்களைப் பரிசோதித்துவிட்டு அதில் தேவைப்படும் முடிவுகளைச் சார்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும்  APP-ல் ஏற்றச் சொல்லுங்கள் ஏற்றுகிறோம். அதுவே பயனுள்ள செயலாக இருக்கும்.


தலைப்பில் உள்ள தில்லாலங்கடி திரைப்பட சந்தானம் போல ஆசிரியர்களை மாற்றுவதால் 'எந்தப் பயனுமில்ல' என்பதைவிட, அதுவே பேராபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

1 comment:

  1. Romba Nandri sir. Innaikku thaan open panni paarthen. Mayakkame vanthuduchi

    ReplyDelete