கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்பது பொய்! போலி விளம்பரத்தை கண்டு மக்கள் ஏமாறாதீர் -தமிழக அரசு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, August 22, 2022

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்பது பொய்! போலி விளம்பரத்தை கண்டு மக்கள் ஏமாறாதீர் -தமிழக அரசு

 கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற தகவல் பொய்யானது என கூட்டுறவுத்துறை பதிவாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும், போலி விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பான விவரம் வருமாறு;கூட்டுறவு வங்கிகூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி 21.08.2022 தேதி தினசரி நாளிதழில் வெளியாகியுள்ளது இது தொடர்பாக கீழ்க்காணும் மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது. மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் விளம்பர எண் 1/2022 நாள் 18.08.2022 தேதி அறிவிக்கை போலியாக வெளியிடப்பட்டுள்ளது.மாநில ஆள்சேர்ப்புஇவ்விளம்பரத்தில் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்றும் இதற்காக விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் ஏதும் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.


போலி விளம்பரம்


எனவே மேற்கண்ட போலி விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகிறது. எனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.


அரசு மறுப்பு


மேலும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த மறுப்பு தகவலை பரப்புவதன் மூலம் அப்பாவி பொதுமக்கள் பலர் யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாறுவதை தடுக்க முடியும்.: கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற தகவல் பொய்யானது என கூட்டுறவுத்துறை பதிவாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

No comments:

Post a Comment