ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, August 23, 2022

ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு

 அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான 'ஜாக்டோ ஜியோ' அமைப்பு, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி போராடி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் முக்கிய வலியுறுத்துதல்கள் பலவும் நிலுவையில் இருப்பதால், அரசின் கவனத்தை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் செப்.10ல் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் தேர்தல் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து லட்சக்கணக்கானோரை திரட்டி பலத்தை காட்டுவது என செயல்படுகின்றனர். இந்த மாநாட்டுக்கு, 'வாழ்வாதார நம்பிக்கை மாநாடு' என பெயர் சூட்டியுள்ளனர்.


ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், ''மாநாட்டில் லட்சக்கணக்கில் திரள்வது என முடிவெடுத்துள்ளோம். இதற்காக ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினோம். மாநாட்டில் பங்கேற்க முதல்வர் உறுதியளித்துள்ளார். கோரிக்கைகள் தொடர்பாகவும், பங்கேற்க வலியுறுத்தியும் கல்வி அமைச்சரையும் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளோம்' என்றார்

No comments:

Post a Comment