ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, August 8, 2022

ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி

 

IMG-20220808-WA0021

ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக தீர்த்து வைக்கப்படும் என்று கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற "ஆசிரியர்களுடன் அன்பில்" என்ற நி்கழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்தார்.


கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கே.பி.ஆர் கல்லூரியில் கல்வியாளர்கள் சங்கமம் நடத்திய “ஆசிரியர்களுடன் அன்பில்” என்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: எனக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்பது கல்வித்துறை அமைச்சராவதற்கு பின்னர் ஏற்பட்டதல்ல, எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு ஆசிரியர்களுடனான தொடர்பும், மரியாதையும் இருந்து வருகிறது.


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோதே, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து

கொண்ட இதே கல்வியாளர் சங்கமம் நிகழ்ச்சியில், வரும் தேர்தலில் ‘‘காட்சி மாறும், ஆட்சியும் மாறும்” அப்போது எங்கள் துறைக்கு நீங்கள் அமைச்சராக வருவீர்கள்" என்று சொன்ன சிகரம் சதிஷ் ஓர் ஆசிரியர்.


ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் மட்டுமல்லாமல், கல்வித்துறையிலும் ஏற்பட்ட குழப்பங்களையும், சீர்கேடுகளையும் சரிசெய்து கொண்டிருக்கிறோம், அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும். கண்டிப்பாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.


மாதத்திற்கு இரண்டு மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து உங்களைத் தேடித் தேடி உங்களது குறைகளைக் கேட்டு அவற்றைக் களைவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். எல்லாவித சவால்களையும் கடந்து, மகிழ்வுடன் ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்

பாடுகளில் மட்டும் ஈடுபடும் சூழல் விரைவில் ஏற்படும். அதில் ஏற்படும் பிரச்சினைகளை அறிய மாவட்டம்தோறும் ஆசிரியர்களை நோக்கி நானே செல்லப்போகிறேன். அங்கு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனுக்குடன் சரிசெய்வேன்.


எனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ என்னை பார்ப்பதற்காக எந்த ஆசிரியர்களும் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம். நாம் ஒன்றினைந்து செயல்பட்டால் தமிழகத்தின் வருங்கால தலைமுறைகளை சிறந்தவர்களாக உருவாக்க முடியும். இவ்வாறு அமைச்சர் பேசினார்

1 comment:

  1. Problems varrathe antha 2 நாள பத்தி tension uruvaakkarathunaalathn nu எல்லோரும் சொல்றாங்களே.

    ReplyDelete