94 சதவீதம் அதிகம்.. புது ரெக்கார்ட் படைத்த மழை! தமிழ்நாட்டிற்கும் இன்னும் \"ரெட் அலர்ட்\".. ஜாக்கிரதை! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, August 3, 2022

94 சதவீதம் அதிகம்.. புது ரெக்கார்ட் படைத்த மழை! தமிழ்நாட்டிற்கும் இன்னும் \"ரெட் அலர்ட்\".. ஜாக்கிரதை!

தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.முக்கியமாக கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்தது. மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தீவிரமாக கனமழை பெய்து வந்தது. நேற்றும் கூட கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது. !ரெட்இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு முழுமைக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுக்கவே இன்று தீவிர கனமழை பெய்யும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.நேற்று மழைநேற்று தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இரவு மழை கொட்டித்தீர்த்தது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகாலையில் இருந்து ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னைசென்னையில் நேற்று நாள் முழுக்க ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க மழை பெய்தது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு முழுக்க விடாமல் மழை பெய்தது. இன்றும் டெல்டா மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இயல்பை விட கடந்த ஒரு மாதத்தில் 94 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளது.ரெக்கார்ட்கடந்த ஜூன் 1 முதல் நேற்று வரை தமிழ்நாட்டில் 24 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. முக்கியமாக மழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு பேரிடர் மீட்பு படையினர் தமிழ்நாடு அரசு மூலம் களமிறக்கப்பட்டு உள்ளனர். இதற்காக தனியாக கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.:. தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்றுஇந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.: ,

No comments:

Post a Comment