கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, July 9, 2022

கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

 புதுடெல்லி: முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங், இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கத்தின் (ஐஏஎம்ஏஐ ) கீழ் இயங்கும், சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்தியா எட்-டெக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் IEC உறுப்பினர்களான பைஜூஸ், வேதாந்து, அப்கிரேடு, அன் அகாடமி, கிரேட் லேனிங், ஒயிட்ஹேட் ஜூனியர், சன்ஸ்டோன் மற்றும் ஐஏஎம்ஏஐ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ரோகித் குமார் சிங், கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் முறைகேடான வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான தகவல்களின் பேரில் ஆர்வத்தை தூண்டும் விளம்பரங்கள் குறித்து விவாதித்தார். இந்திய கல்வி தொழில்நுட்ப சூழல் முறையில் நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து சுட்டிக்காட்டினார். மேலும், “சுய ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்து, முறைகேடான வர்த்தக செயல்பாடுகளை தடுக்காவிட்டால், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரசே கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கும் என்ற செயலாளர், சில விளம்பரங்கள் தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி இல்லை என்றும் அத்தகைய விளம்பரங்களில் நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில் தடுப்பு முறைகளை கடைபிடிப்பது அவசியம்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment