மகாராஷ்டிா பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த தமிழக மாணவி, - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, July 10, 2022

மகாராஷ்டிா பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த தமிழக மாணவி,


புதுக்கோட்டை: மகாராஷ்டிா பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த புதுக்கோட்டை மாணவி, கலெக்டராக விரும்புவதாக தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அழகுவள்ளி மகள் ஜெயலெட்சுமி(18). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், பி.ஏ.வரலாறு படித்து வருகிறார். ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்தபோது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசாவை (விண்வெளி ஆராய்ச்சி மையம்) பார்வையிட தேர்வு செய்யப்பட்டார். நாசா செல்வதற்கான முழு தொகையையும் கிராமாலயா தொண்டு நிறுவனம் வழங்க முன்வந்தது. மேலும் அந்த தொண்டு நிறுவனம், வேறு ஏதாவது உதவி வேண்டுமா என்றதும், மாணவி எங்கள் ஊரில் எந்த ஒரு இல்லத்திலும் கழிவறை இல்லாததால் பெண்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே எங்கள் கிராமத்திற்கு கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று மாணவி கேட்டார். இந்த கோரிக்கை ஏற்ற அந்த கிராமாலயா தொண்டு நிறுவனம், ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள 126 வீடுகளுக்கும் தனித்தனியாக குளியல் அறையுடன் கூடிய கழிவறையை கட்டி கொடுத்தது. இது அந்த கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இந்த மாணவியை பலரும் பாராட்டினர். ஜெயலட்சுமியின் இந்த செயல்பாடுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் நான்கு பக்கத்தில் பாடமாக இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மாணவி ஜெயலெட்சுமி கூறுகையில், எனக்கு நாசா செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா காரணமாக செல்ல முடியாமல் போய்விட்டது. மீண்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நாசா செல்வேன். நான்காம் வகுப்பு படிக்கும் போதே எனது ஆசிரியரிடம் பாட புத்தகத்தில் இதுபோன்று இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஆசிரியர் உன்னால முடியாத விஷயம் எதுவும் இல்லை என நினைத்து செயல்படு என்று தெரிவித்தார். நான்காம் வகுப்பில் ஆசைப்பட்ட எனது கனவு, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் என்னை பற்றிய பாடம் இடம்பெற்றதால் நனவாகியுள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வானியல் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலையும், பொருளாதாரமும் இடமளிக்காததால் தற்போது இளங்கலை வரலாறு படித்து வருகிறேன். கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வருகிறேன் என்றார்.

No comments:

Post a Comment