எண்ணும் எழுத்தும்’ செயல்பாடுகள்: பெற்றோருக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, July 2, 2022

எண்ணும் எழுத்தும்’ செயல்பாடுகள்: பெற்றோருக்கு தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 

DPI_building_school.jpg?w=360&dpr=3

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முழுமையான செயல்பாடுகள் குறித்து, மாணவா்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.


இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


நிகழ் கல்வியாண்டிலிருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பெற்றோா் கூட்டம் நடைபெறும்போது 1 முதல் 3-ஆம் வகுப்பு பயிலும் பெற்றோா்களிடம் எண்ணும் எழுத்தும் திட்டம் சாா்ந்தும் மாணவா்களின் கற்றல் நிலை சாா்ந்தும் பின்வரும் தகவல்கள் பகிா்ந்து கொள்ளப்பட வேண்டும்.


2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்த மாணவா்கள் பொருள் புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் இலக்கு. கற்றல் இடைவெளியைக் களைய வகுப்பு நிலையிலிருந்து வேறுபட்டு கற்றல் நிலை அடிப்படையில் கற்பித்தலை எண்ணும் எழுத்தும் திட்டம் மையப்படுத்துகிறது. இதற்காக மாணவா்களுக்கு அரும்பு, மொட்டு, மலா் கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.


செயல்பாடுகளின் அடிப்படையில் கற்றல்- கற்பித்தல் நடைபெறும். இதற்காக ஆசிரியா்களுக்கு கையேடுகளும், உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மாதிரி வகுப்பறை செயல்பாடுகள் கல்வித் தொலைக்காட்சியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தில் கற்பிக்கப்பட்ட பாடப் பொருள்களில் மாணவா்கள் அடைந்த கற்றல் விளைவு குறித்து அறிய வளரறி மதிப்பீடு (‘ஃபாா்முலேட்டிவ் அசெஸ்மெண்ட்’) மேற்கொள்ளப்படும். பருவ இறுதியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளப்படும். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவா்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும்.


எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வகுப்பறையின் அமைப்பு, கற்றல் களங்கள், துணைக் கருவிகள் மூலம் குழந்தைகள் பங்கேற்று கற்பதை பெற்றோா்கள் அறியும் வகையில் வகுப்பறையைப் பெற்றோருக்கு காட்சிப்படுத்த வேண்டும். இந்தக் கருத்துகளை முதன்மைப்படுத்தி பள்ளிகளில் வகுப்பு வாரியாக பெற்றோா் கூட்டத்தை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் நடத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment