NMMS தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!!! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, June 27, 2022

NMMS தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!!!

 பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் 2021-2022ம் கல்வியாண்டில் 8 ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 20 பேர் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேசிய உதவித் தொகைக்கான தேர்வினை ( NMMS EXAM ) கடந்த 05.3.2022 அன்று எழுதினார்கள்.

 NMMS EXAM முடிவுகள் 27.6.2022 தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 20 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

 இப்பள்ளியின் மூன்று மாணவியர்கள் அதிக மதிப்பெண் ( 180 க்கு 155 , 153,144 ) பெற்று மாநில அளவில் முதல் , இரண்டு மற்றும் நான்காம் இடங்களை பெற்றுள்ளார்கள்.

இந்த 20 மாணவர்களும் மாதந்தோறும் ரூ. 1000 / - வீதம் நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து அரசின் உதவித்தொகை பெறுவார்கள். வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளி ஈரோடு மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது

No comments:

Post a Comment