பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, June 20, 2022

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பு

 சென்னை: சென்னையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

சென்னையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம் (CSIR Madras Complex) உள்ளது. இது மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.


இங்கு புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:


காலியிடங்கள் எத்தனை?

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகத்தில் Scientific Administrative Assistant - 01, Project Associate I - 09, Project Associate II - 02, Senior Project Associate - 02, Project Co-ordinator II - 01 என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன


Education Qualification

Scientific Administrative Assistant டிகிரியும், Project Associate I பணிக்கு MSc Chemistry அல்லது Chemical Engineering பாடப்பிரிவில் BE, BTech முடித்திருக்க வேண்டும்.
Project Associate II பணிக்கு Chemical, Mechanical பாடப்பிரிவில் BE, BTech முடித்தவர்கள் மற்றும் GATE தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Senior Project Associate பணிக்கு MSc Chemistry அல்லது Science, Engineering பாடப்பிரிவில் டாக்டரேட் பட்டமும்,
Project Co-ordinator-II பணிக்கு Structural Engineering பிரிவில் ME Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு என்ன?

Project Associate I, II பணிக்கு 35 வயதுக்குள்ளும், Senior Project Associate பணிக்கு 40 வயதுக்குள்ளும், Scientific Administrative Assistant பணிக்கு அதிகபட்சம் 50 வயதுக்குள்ளும், Project Co ordinator -II பணிக்கு அதிகபட்சம் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

Scientific Administrative Assistant பணிக்கு ரூ.18 ஆயிரம் கிடைக்கும். Project Associate-I பணிக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரையும், Project Associate-II பணிக்கு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், Senior Project Associate பணிக்கு ரூ.42 ஆயிரமும், Project Co-ordinator-II பணிக்கு ரூ.30 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும்


விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.csircmc.res.in இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் 28.06.2022 முதல் 30.06.2022 வரை நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். கூடுதல் விபரங்களை காண https://www.csircmc.res.in/careers லிங்கை கிளிக் செய்யுங்கள்.


No comments:

Post a Comment