தொழிலாளர் மேலாண்மை பட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, June 22, 2022

தொழிலாளர் மேலாண்மை பட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்டமேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்படுகின்றன.பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறுகின்றன. விருப்பமுள்ள 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த திங்கள்கிழமை (ஜூன்20) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெற விண்ணப்பக் கட்டணத்துக்கான ரூ.200/- (SC/ST ரூ.100/-) வங்கி வரைவோலையை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் விரைவு அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 4-ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) இரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர், 9884159410 என்ற செல்பேசி எண்ணுக்கும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்), அம்பத்தூர், சென்னை 600098 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-29567885/29567886 என்ற தொலைபேசி எண்கள், tilschennai@tn.gov.in என்ற மின் அஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment