பிஎச்.டி., படிக்கமாணவர்களுக்கு ஊக்கத் தொகை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, June 26, 2022

பிஎச்.டி., படிக்கமாணவர்களுக்கு ஊக்கத் தொகை

 முழு நேர முனைவர் பட்டப் படிப்பான பிஎச்.டி., படிக்கும் மாணவர்கள், ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், முழு நேர முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 2021 - 22ம் கல்வியாண்டில், பிஎச்.டி., படித்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களிடம் இருந்து, விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை, www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதளத்தில் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.


இது குறித்து, அனைத்து பல்கலைகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் விண்ணப்பிக்க, இம்மாதம் 10ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. இந்த அவகாசம், ஜூலை 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, அடுத்த மாதம், 8ம் தேதி மாலை 5:45 மணிக்குள், ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் இணைப்பு கட்டடம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில், அனுப்பி வைக்க வேண்டும்.முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது என, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் மணிவாசகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment