மாத சம்பளம் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.1.31 லட்சம்! அழைக்கும் மத்திய அரசு பணி! விண்ணப்பிப்பது எப்படி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, June 16, 2022

மாத சம்பளம் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.1.31 லட்சம்! அழைக்கும் மத்திய அரசு பணி! விண்ணப்பிப்பது எப்படி

 

 


மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டிஆர்டிஓவில் மாதம் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மத்திய பாதுகாப்பு துறையின் கீழ்() எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.இது இந்தியாவின் விண்வெளித்துறை மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்களின் உற்பத்திகளை செய்து வழங்கி வருகிறது இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது.காலியிடங்கள் எத்தனை?இந்நிலையில் தான் டிஆர்டிஓ சார்பில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சயின்டிஸ்ட் எப் பிரிவில் 3, சயின்டிஸ்ட் இ பிரிவில் 6, சயின்டிஸ்ட் டி பிரிவில் 15, சயின்டிஸ்ட் சி பிரிவில் 34 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வி தகுதி; வயது வரம்புஇந்த பணியிடங்களுக்கு பிஇ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். சயின்டிஸ்ட் எப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்குள்ளும், சயின்டிஸ்ட் டி மற்றும் இ பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 45 வயதுக்குள்ளும், சயின்டிஸ்ட் சி பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது 28.06.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட உள்ளது.சம்பளம் எவ்வளவு? சயின்டிஸ்ட் எப் பணிக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 100 கிடைக்கும். சயின்டிஸ்ட் இ பணிக்கு மாத சம்பளமாக 1 லட்சத்து 23 ஆயிரத்து 100 வழங்கப்படும். இதேபோல் சயின்டிஸ்ட் டி பணிக்கு ரூ.78 ஆயிரத்து 800ம், சயின்டிஸ்ட் சி பணிக்கு ரூ.67,700ம் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் இன்டர்வியூ மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்விண்ணப்பிப்பது எப்படி?தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை 28.06.2022ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  கூடுதல் விபரங்களை rac.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண https://rac.gov.in/download/advt_139.pdf கிளிக் செய்யுங்கள். மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய https://rac.gov.in/index.php?lang=en&id=0 கிளிக் செய்து பயன் பெறலாம்.

No comments:

Post a Comment