RTE - இலவச மாணவர்., சேர்க்கை; இன்று இடங்கள் ஒதுக்கீடு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, May 30, 2022

RTE - இலவச மாணவர்., சேர்க்கை; இன்று இடங்கள் ஒதுக்கீடு

 கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்ணப்பித்தோருக்கு, இன்று இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பான ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி.,யில், 25 சதவீத இடங்களில், அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை, கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம். அதற்கு பதில், அரசின் சார்பில், தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்தப்படும். இந்த திட்டத்தில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த 20ம் தேதி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.30 லட்சம் இடங்களுக்கு, 1.42 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். 


விண்ணப்ப பரிசீலனை ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், இன்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒரு இடத்துக்கு பலர் விண்ணப்பித்திருந்தால், பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை பிரதிநிதிகள் முன்னிலையில், குலுக்கல் நடத்தி தகுதியானவரை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment