எல்லாருக்கும் பென்சன் கட்டாயம்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, May 30, 2022

எல்லாருக்கும் பென்சன் கட்டாயம்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 எல்லா ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு சம்பளமும், பென்சனும் வழங்கப்பட வேண்டியது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமை என ஒரிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 


ஒரிசா மாநிலம் போலங்கிர் மாவட்டம் சந்தன்பாதியில் உள்ள பஞ்சாயத்து உயர் நிலைப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த உயர் நிலைப்பள்ளி அரசு ஆதரவு இல்லாத பள்ளியாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1994ஆம் ஆண்டு முதல் அந்த பள்ளியை ஒரிசா அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. எனவே, மனுதாரரான தலைமை ஆசிரியர் அரசு ஊழியராகவே பணி ஓய்வுபெற்றுள்ளார். ஆனால், பணி ஓய்வுக்குப் பின் பென்சன் பெறுவதில் தனக்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். அதாவது, நிர்வாக சிக்கல்கள் காரணமாக தனக்கு பென்சன் வழங்கப்படாமல் 74 வயதிலும் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கான பென்சன் நிலுவைத் தொகையில் வட்டி சேர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் இதையடுத்து, சம்பளம் மற்றும் பென்சன் பெறுவது ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கான உரிமை என ஒரிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மனுதாரர் அரசு ஊழியராகவே தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளதால் பென்சன் பெற வேண்டியது அவருக்கான உரிமை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 மேலும், ஊழியர் தரப்பில் தவறு இல்லாமல், அவர் வேலை செய்த நிறுவனம் அல்லது அரசின் தவறு காரணமாக ஊழியர்களை வருத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே, உரிய கடைசி தேதிக்குள் பென்சன் வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment