தமிழகத்தின் ஒரே பயிற்சி மையத்தில் 261 மாணவர்கள், அகில இந்திய குடிமைப்பணி (சிவில் சர்வீஸ்) தேர்வில் வெற்றி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, May 31, 2022

தமிழகத்தின் ஒரே பயிற்சி மையத்தில் 261 மாணவர்கள், அகில இந்திய குடிமைப்பணி (சிவில் சர்வீஸ்) தேர்வில் வெற்றி


சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 261 மாணவர்கள், அகில இந்திய குடிமைப்பணி (சிவில் சர்வீஸ்) தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இது தொடர்பாக அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளுக்காக மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வு 2021 அக்டோபர் 10-ம் தேதியும், முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 7 முதல் 16-ம் தேதி வரையும் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஆளுமைத் தேர்வு ஏப்ரல் 5 முதல் மே 26-ம் தேதி வரை டெல்லியில் நடந்தது. தேர்வு முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 685 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 261 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். இதில் 19 பேர், தங்கள் முதல் முயற்சியிலேயே வென்றவர்கள். அதில், யக்‌ஷ் சவுத்ரி அகில இந்திய அளவில் 6-ம் இடம் பிடித்துள்ளார். இவர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் முதன்மை நிலைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பயிற்சி பெற்றவர். தேசிய அளவில் 42-ம் இடத்தை பிடித்த ஸ்வாதி என்ற மாணவியும், சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர். முதல் 100 இடங்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 41 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 15 பேர் பெண்கள். தமிழகத்தில் இருந்து மொத்தம் 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர், இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள் 19 பேர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment