அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கை இல்லை- இரு மொழிக் கொள்கை தான்.. தமிழக பள்ளி கல்வித்துறை உறுதி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, April 24, 2022

அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்கை இல்லை- இரு மொழிக் கொள்கை தான்.. தமிழக பள்ளி கல்வித்துறை உறுதி

 


தமிழக அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை- இருமொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மும்மொழி கொள்ளை செயல்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு அரசு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக் கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்புமொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்தம் தாய்மொழியையும், விருப்பப்பாடமாகப் படித்து, தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.எனவே, தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு பள்ளி கல்வித்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்..:

No comments:

Post a Comment