மருத்துவ மாணவர்களுக்கு டேப்லெட்.! முதல்வரை வாழ்த்தி கவிதை படித்து! உருக்கமாக பேசிய மாணவிகள்..! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, April 26, 2022

மருத்துவ மாணவர்களுக்கு டேப்லெட்.! முதல்வரை வாழ்த்தி கவிதை படித்து! உருக்கமாக பேசிய மாணவிகள்..!


தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கையடக்க கணினிகளை வழங்கினார்.மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, இதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.அரசுப் பள்ளிகளில் பயின்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான சேர்க்கையில் 7.5 சதவிகித ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டு, அமுலுக்கு வந்தது. தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாய்க்கு விற்றால் எப்படி வாழ்வது?”மாணவர்களுக்கு டேப்லட்இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு. வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்தது. இவ்வாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் சதவிகித ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்துள்ளது.முதல்வர் ஸ்டாலின்இது மட்டுமன்றி இந்த ஒதுக்கீட்டைப் பொறியியல் வேளாண்மை கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு படிப்புகளில் சேர்க்கையிலும் நடைமுறைப்படுத்திட முதல்வர் ஆணையிட்டார். 2021-22-ஆம் கல்வி ஆண்டில் மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் பல் மருத்துவத்தில் 1,460 இடங்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளார்கள். இவர்களுள் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் 445 நபர்கள் மருத்துவப் படிப்பிலும், 110 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இம்மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின்போது கணினிகள் வழங்கப்பட்டன.முதல்வரை வாழ்த்தி கவிதைமேலும், இந்நிகழ்ச்சியில், மருத்துவ மாணவி செல்வி ஹேமவர்ஷினி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி கவிதை வாசித்தார். அதனைத் தொடர்ந்து, கையடக்க கணினிகள் பெற்றுக் கொண்ட மருத்துவ மாணவர்களின் சார்பாக திரு. யுவராஜ், செல்வி தனிஷ்கா ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.அமைச்சர்கள் பங்கேற்புஇந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment