மணிமண்டபங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு படிக்கும் வசதி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, April 27, 2022

மணிமண்டபங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு படிக்கும் வசதி


சென்னை: செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மணிமண்டபங்களில் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக மாணவர்களின் வசதிக்காக 10 மணிமண்டபங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கானப் பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்துதல், மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைத்தல், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விருது வழங்குதல், முதல் முறையாக அச்சு துறைக்கு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 22 முக்கிய அறிவிப்புகள்: > பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கானப் பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும். > பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகை உயர்த்தப்படும். > தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும். > வேலூர் மாநகரத்தில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கத்தினை அண்ணா பல்நோக்குக் கலையரங்கமாக மாற்றி புதியதாகக் கட்டப்படும். > தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அதியமான் கோட்டம் புனரமைக்கப்படும். > செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மணிமண்டபங்களில் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக மாணவர்களின் வசதிக்காக 10 மணிமண்டபங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். > செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர்த் தியாகிகள், தமிழ் அறிஞர்கள், முக்கியத் தலைவர்களின் மணிமண்டபங்கள், நினைவகங்கள், அரங்கங்கள் ஆகியவற்றில், அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஒளிப்படத் தொகுப்புகள் (Photo Album), புத்தகங்கள், காட்சிப்படுத்தப்பட்டு, விரைவுத் துலங்கல் குறியீடு (QR Code) முறையில் காணவும் வழிவகை செய்யப்படும். > அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், முதற்கட்டமாக பொதுமக்கள் கூடும் முக்கிய பேருந்து நிலையங்களில் மின் சுவர்கள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படும். > தமிழரசு அச்சகத்தின் பயன்பாட்டிற்காக நவீன அச்சு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். > தமிழ்நாடு திரைப்படப்பிரிவின் ஊடக மையத்திற்கு புதிய நவீன தொழில் நுட்பக் கருவிகள் கொள்முதல் செய்து மேம்படுத்தப்படும். > தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் எண்மிய மின்னணு வீடியோ ஆவணக் காப்பகப் (Digital e-library) பணியில் மீதமுள்ள 3,700 கேசட்டுகள் எண்மியமாக்கப்படும். > தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு உயர்த்திட, முதற்கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு. > தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். > தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் மாணவ/ மாணவியர் மற்றும் பணியாளர்களுக்கு உணவு அருந்தும் அறை (Dining Hall) அமைக்கப்படும். > தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் “கலைஞர் கலைத்துறை வித்தகர்” விருது வழங்கப்படும். எழுதுபொருள் மற்றும் அச்சு > தண்டையார்பேட்டை-காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை முற்றிலுமாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் கட்டுதல். > முதல் முறையாக அச்சு துறைக்கு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைத்தல். > அரசு மைய அச்சகத்திற்கு, நான்கு வண்ண எண்ணிம உற்பத்தி அச்சுப்பொறி (FourColour Toner Based Digital Production Printer) ஒன்று கொள்முதல் செய்தல் > அரசு மைய அச்சகம் மற்றும் 5 கிளை அச்சகங்களுக்கு கருப்பு வெள்ளை எண்ணிம மை தெளிப்பு உற்பத்தி அச்சுப்பொறி (Black and White Inkjet DigitalProduction Printer)கொள்முதல் செய்தல் > நான்கு வண்ண எண்ணிம மை தெளிப்பு உற்பத்தி அச்சுப் பொறி இயந்திரங்கள் (Four Colour Digital Inkjet Production Printer) கொள்முதல் செய்தல் > சென்னை , அரசு எழுதுபொருள் அலுவலகக் கட்டடம் ரூ.1,25,00,000 (ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம்) செலவில் புனரமைக்கப்படும். > அரசு மைய அச்சகம் மற்றும் அனைத்து கிளை அச்சகங்களுக்கு நெகிழி அடித்தட்டுகள் (Plastic Pallets) கொள்முதல் செய்தல்.

No comments:

Post a Comment