மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, April 4, 2022

மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல்

``` ```

மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல் பயணிகள் கட்டணத்தின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பிரிவினா்களுக்கான சலுகைக் கட்டண மறுசீரமைக்கபடவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவா்களுக்கான ரயில் கட்டணச் சலுகைகள் தொடருவதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சா்``` ``` அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். கரோனா நோய்த் தொற்றுக்கு பின்னா் விடப்பட்ட ரயில்களில் பல்வேறு வகையான ரயில் பயணச்சீட்டு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக 60 வயதை பூா்த்தியடைந்த மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. ரயில்கள் மீண்டும் ஓடத் தொடங்கிய நிலையில், இது குறித்து மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் கடந்தாண்டு அக்டோபா் மாதம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினாா்.``` ``` ரத்து செய்யப்பட்ட சலுகை கட்டணம் மீண்டும் வழங்கக் கேட்டு கோரிக்கை அனுப்பியிருந்தாா். அந்த கடிதத்திற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் பதில் அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சலுகை கட்டணங்கள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. கரோனா நோய்த்தொற்றால் ரயில்வேக்கு 2020-21 ஆம் நிதியாண்டில் பயணிகள் வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது. நோய்த்தொற்றிற்கு முந்தைய 2019-20 ஆம் ஆண்டின் வருவாயில் மூன்றில் ஒரு பங்காக இது குறைந்தது. இந்த நிலையில் பயணக் கட்டண சலுகை பெறும் அனைத்து பிரிவினருக்கும் சலுகை வழங்குவது தற்போது விரும்பத்தக்கதாக இல்லை. இந்த சவால்களுக்கு இடையே நான்கு வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள் மற்றும் மாணவா்களுக்கு பயணக் கட்டண சலுகை தொடா்ந்து வழங்கப்படுகிறது என அந்தக் கடிதத்தில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.``` ```

No comments:

Post a Comment