இணைய வழியில் இலவச தமிழ் கல்வி.. வெளிமாநிலம், வெளிநாட்டு குழந்தைகளுக்கு அருமையான வாய்ப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 28, 2022

இணைய வழியில் இலவச தமிழ் கல்வி.. வெளிமாநிலம், வெளிநாட்டு குழந்தைகளுக்கு அருமையான வாய்ப்பு

 இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சார்பில் இணைய வழியில் தமிழ் கற்று கொடுக்கப்படுகிறது. மே மாதத்துக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.விஞ்ஞான உலகத்தில் வாழும் நாம் அனைவரும் சொந்த கிராமத்தை விட்டு வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று தொழில், பணி செய்து வருகிறோம்.இதில் பலருக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் பிடித்து போகின்றன. இதையடுத்து அவர்கள் தொழில், பணி செய்ய துவங்குகின்றனர். தமிழ் கற்றலுக்கான சூழல் குறைவுவெளிமாநிலம், வெளிநாடுகளில் வசிப்பதால் அவர்களின் குழந்தைகளுக்கு தாய் மொழியான தமிழ் கற்பது என்பது எட்டாக்கனியாகும் சூழல் உள்ளது. பெற்றோருக்கு தமிழ் தெரிந்தாலும் கூட தற்போதைய காலக்கட்டத்தில் இருவரும் பணி செய்வதால் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க முடியாத நிலைமை நிலவுகிறது.


தமிழ் அறக்கட்டளை திட்டம்


இதை போக்க ‛தமிழ் அறக்கட்டளை பெங்களூரு' திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி வெளிமாநிலம், வெளிநாடுகளில் உள்ள குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் தமிழ் கற்று கொள்ள முடியும். இதுகுறித்து தமிழ் அறக்கட்டளை பெங்களூரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இணையவழியில் 5 மாத வகுப்புகள்


உலகின் பல்வேறு நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் தமிழ் கற்றுத்தரும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். இந்த குறையை போக்கும் வகையில், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வழங்குகிறது. அடிப்படைத் தமிழ், இடைநிலைத் தமிழ், உயர்நிலைத் தமிழ், பயன்பாட்டுத் தமிழ், இலக்கணத்தமிழ் ஆகிய 5 படிநிலைகளை கொண்ட தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் 5 மாதங்கள் கொண்டதாகும்.


ஒன்றாம் தேதி சேர்க்கை


ஒவ்வொரு படிநிலையில் ஒரு மாதகாலத்திற்கு நடத்தப்படுகிறது. தற்போது 3 படிநிலைகளுக்கான வகுப்புகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. அந்தவகையில் மே மாதத்திற்கான வகுப்புகள் வரும் ஒன்றாம் தேதி நடக்க உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

5 வயது மேற்பட்டவர்களுக்கு...

முதல்படிநிலைக்கு https://forms.gle/jKkRKXc6rpWLZtyy5, இரண்டாம் படிநிலைக்கு https://forms.gle/vwh4pNdPzwzdShfg6, மூன்றாம் படிநிலைக்கு https://forms.gle/CA4pDvzMnJeDUwiV7 என்ற கூகிள்ஃபார்ம் இணையப்படிவத்தில் விண்ணப்பங்களை நிரப்பி செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஏப்ரல் 30ம்ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் .5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த வகுப்புகளில் சேரலாம். பாடங்கள் தமிழ் வழியில் கற்பிக்கப்படும்.


என்னென்ன பயிற்சிகள்


தமிழ்ப் பயிற்சிப்பாடம் தவிர, திருக்குறள் மற்றும் அது தொடர்பான கதை, நாப்பிழற்பயிற்சி, அறநெறிப் பாடல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. திங்கள்முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள் நடக்கும். சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். கூடுதல் விவரங்களுக்கு: தனஞ்செயன்-9483755974, குமணராசன்-9820281623 ஆகிய கைப்பேசி எண்களை அணுகலாம்'' என கூறப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment