மாடுகளை பிடிக்க பயந்து நேர்முக தேர்வை விட்டு பாதியில் வெளியேறிய பட்டதாரிகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 21, 2022

மாடுகளை பிடிக்க பயந்து நேர்முக தேர்வை விட்டு பாதியில் வெளியேறிய பட்டதாரிகள்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டதாரிகள், என்ஜினியரிங் பட்டதாரிகள் தொழில் படிப்பு படித்தவர்கள் என பலரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது. என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் வந்திருந்தனர். நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது அறிவு திறன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்கள் மாடுகளை கையாளுவது எப்படி என்பது குறித்தும், சைக்கிள் ஓட்டி காண்பித்தனர். நேர்முகத் தேர்வில் பங்கேற்ற என்ஜினியரிங் பெண் பட்டதாரிகள் ஏராளமானோர் மாடுகளை பிடிக்க பயந்து நேர்முக தேர்வை விட்டு பாதியில் வெளியேறினார்கள். பெண்கள் சிலர் சைக்கிள் ஓட்ட முடியாமல் வெளியே சென்றனர். நேர்முகத் தேர்வில் பங்கேற்ற பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் சிலர் சைக்கிள் ஓட்டியும், மாடுகளை பிடித்தும் கலக்கினார்கள். வருகிற 30-ந்தேதி வரை நேர்முகத் தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment