இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் வருகிற 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 7, 2022

இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் வருகிற 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

``` ```தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009 பிரிவு 12 (1) (சி)-ன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி, 2022-23-ம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வருகிற 13-ந்தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும். பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் சார்ந்த விவரங்களை 18-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதனைத்தொடர்ந்து 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் அதன் நுழைவுவாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் இந்த மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.``` ```

No comments:

Post a Comment