CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வுகள் அறிவிப்பு. - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 11, 2022

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வுகள் அறிவிப்பு.


 சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் தொடங்கப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக பாடங்கள் எடுக்கப்பட்டன. கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம்``` ``` முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் மாநில கல்வி பாடத்திட்டத்தின் படி பயிலும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே24ம் தேதி வரை நடைபெறும். ``` ```சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2ம் பருவத் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 26ம் தேதி தொடங்கும் 2ம் பருவத் தேர்வுக்கான பாட வாரியான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு கால அட்டவணை, தேர்வு நேரம், தேர்வுகள் உள்ளிட்ட விவரங்களுக்கு``` ``` இணையதள முகவரி www.cbse.gov.in அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. அறிவுரை வழங்கியிருக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வினாத்தாளை படிக்கச் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment