உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம்.. பாவம் ஆப்கானிஸ்தான்.. இந்தியாவுக்கு என்ன இடம்? - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 18, 2022

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம்.. பாவம் ஆப்கானிஸ்தான்.. இந்தியாவுக்கு என்ன இடம்?

``` ```


 உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் பின்லாந்து நாடு 5வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தானும் உள்ளது. 150 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னேறியுள்ளது.உலக மகிழ்ச்சி தினம் வரும் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், உலகிலுள்ள மகிச்சியான நாடுகளில் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம்.``` ```கடந்த 10 ஆண்டுகளாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டுக்கான அறிக்கை மார்ச் 18, 2022 அன்று வெளியிடப்பட்டதுஉலக மகிழ்ச்சி நாடுகள்உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியல் பொதுவாக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், வாழ்க்கைத் தேர்வுகளைச் செய்வதற்கான சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழலின் உணர்வுகள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் 150 நாடுகளை வரிசைப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாறியும் 0-10 என்ற அளவில் மக்கள்தொகை கொண்ட சராசரி மதிப்பெண்ணை அளவிடுகிறது.உலக மகிழ்ச்சி அறிக்கை2012 முதல் வெளியிடப்பட்டு வரும் உலக மகிழ்ச்சி அறிக்கை இரண்டு முக்கிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. மகிழ்ச்சி அல்லது வாழ்க்கை மதிப்பீடு கருத்துக் கணிப்புகள் மூலம் அளவிடப்படுகிறது. மற்றும் நாடுகள் முழுவதும் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை மதிப்பீட்டை தீர்மானிக்கும் முக்கிய கூறுகளை அடையாளம் காணுதல் இதன் முக்கிய நோக்கமாகும். ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க்கால் இந்தாண்டு அறிக்கை வெளியிடப்பட்டதுபின்லாந்து முதலிடம்இந்த அறிக்கையில் தேசிய மகிழ்ச்சியின் தரவரிசைகள் பல காரணிகளின் அடிப்படையிலும், முதன்மையாக தனிநபர்களின் பதில்களின் அடிப்படையிலும் இந்த பட்டியில் உள்ளது. ``` ```இந்த ஆண்டு ஐநாவின்146 நாடுகளை வரிசைப்படுத்தியது. இந்த அறிக்கையின் படி உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் பின்லாந்து நாடு 5வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு, கடந்த ஆண்டு முதல் 10 இடங்களில் இருந்த நாடுகள், மேலும் கீழும் நகர்ந்துள்ளன. டாப் 10 பட்டியலில் இருந்து ஆஸ்திரியா மட்டும் வெளியேறியது.மகிச்சியற்ற ஆப்கானிஸ்தான்மறுபுறம், ஆப்கானிஸ்தான் உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து லெபனான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் உள்ளன. உலக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஸ்காண்டிநேவிய நாடுகள் மூன்று வென்றன. முதல் 10 இடங்களில் பின்லாந்தைத் தொடர்ந்து டென்மார்க் உள்ளது, இது கடந்த ஆண்டு அறிக்கையில் இரண்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் உள்ளது. ஐஸ்லாந்து. சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை முதல் 10 பிரிவில் பின்லாந்து மற்றும் டென்மார்க்கைத் தொடர்ந்து உள்ளன. இந்தியா 139வது இடம்அடுத்ததாக லக்சம்பர்க், ஸ்வீடன், நார்வே, இஸ்ரேல், நியூசிலாந்து ஆகிய நாடுகள் 6 முதல் 10 இடங்களி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தரவரிசையில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த வருடத்தில் 147 நாடுகளுக்கான பட்டியலில் 139 இடத்தில் இந்தியா இருந்தது. இந்த முறை 150 நாடுகள் கொண்ட பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி 136 வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா 80வது இடத்திலும், உக்ரைன் 98வது இடத்திலும் உள்ளன

``` ```

No comments:

Post a Comment