அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் : அமைச்சர் தொடங்கி வைத்தார் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, March 28, 2022

அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் : அமைச்சர் தொடங்கி வைத்தார்

``` ```

அகில இந்திய குடிமைப்பணி முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான புவியியல் பாடப் புத்தகத்தை அமைச்சர் வெளியிட, அரசு தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவர் இறையன்பு பெற்றுக் கொண்டார். சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில்,``` ``` 2022 ஆம் ஆண்டிற்கான முதல் நிலை தேர்விற்கான பயிற்சி வகுப்பினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். மேலும், முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான புவியியல் பாடப் புத்தகத்தை அமைச்சர் வெளியிட, அரசு தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவர் வெ.இறையன்பு பெற்றுக் கொண்டார். இதில் மனிதவள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உடனிருந்தார்.``` ``` அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 165 நபர்கள் (முழு நேரம் / பகுதி நேரம்) அகில இந்திய குடிமைப் பணிகள் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற உள்ளனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. முன்னதாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், 75ஆவது சுதந்திர தின விழா பூங்காவை திறந்து வைத்தார். ``` ```

No comments:

Post a Comment