உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு - SPD செயல்முறைகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 24, 2022

உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு - SPD செயல்முறைகள்

 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு  ரூ2000  பரிசு அறிவிப்பு SPD செயல்முறைகள்


 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் ( PAB Minutes ) உள்ளபடி செய்துணர் கற்றல் திட்டத்தின் கீழ் ``` ```, மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி ( Quiz Competition ) நடத்துவதற்காக , இடைநிலையில் , 6177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு , பள்ளி ஒன்றுக்கு ரூ . 500 / - வீதம் 30.885 இலட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.


இந்த 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் , அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு , அனைத்து பாடங்களிலும் அவர்களது கற்றல் அடைவை சோதிக்கும் வகையில் , இணையதள வழியாக ( Hi - Tech Lab வாயிலாக ) ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து சரியான பதிலைத் தெரிவு செய்யும் விதமாக 30 வினாக்கள் கொண்ட Basic Quiz நடத்தப்பட்டது


வினாக்கள் அனைத்தும் SCERT- ஆல் தயாரிக்கப்பட்டு EMIS வாயிலாக போட்டிகள் நடத்தப்பட்டது . மேற்காண் Basic Quiz செயல்பாட்டில் கலந்துகொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் , ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற 1,480 மாணவர்களின் விவரம் ( ஒரு மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் 37 மாவட்டங்களுக்கு ) EMIS வாயிலாக பெறப்பட்டுள்ளது . இந்நிலையில் , தெரிவு செய்யப்பட்டுள்ள 1,480 மாணவர்களையும் ஊக்கப்படுத்தவும் , மேலும் கற்றலின்மீது ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் ``` ```, அவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் மாணவர் ஒருவருக்கு ரூ .2000 / - வீதம் மொத்தம் ரூ .29,60,000 / - நிதி இணைப்பில் உள்ளவாறு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.

IMG_20220324_195906


IMG_20220324_195922

``` ```

No comments:

Post a Comment