அண்ணா பல்கலை. மாணவர்கள் 10,000 பேர் பெயில்.. அதிர்ச்சி காரணம்.. மறுதேர்வு எழுத வேண்டிய கட்டாயம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, March 20, 2022

அண்ணா பல்கலை. மாணவர்கள் 10,000 பேர் பெயில்.. அதிர்ச்சி காரணம்.. மறுதேர்வு எழுத வேண்டிய கட்டாயம்

``` ```

 


அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 பேரை தேர்வு எழுதவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது``` ```.அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு பொறியியல் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி நடைபெற்றது.இதற்காக தேர்வு தொடங்கும் நேரத்தில் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் எண்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வானது காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணிக்கு நிறைவடையும். குறிப்பிட்ட நேரத்துக்குள் விடைத்தாளை மாணவர்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு. இதைத் தாண்டி ஒன்றரை மணி நேரத்துக்குள் அதாவது பிற்பகல் 2 மணிக்குள் விடைத் தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.10,000 மாணவர்கள் தாமதம்இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும், கூடுதல் நேரத்தையும் ``` ```கடந்து சுமார் 10,000 மாணவர்கள் விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இவ்வாறு கால தாமதமாக விடைத் தாள் பதிவேற்றம் செய்த மாணவர்களை தேர்வில் பங்கேற்காதவர்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.ஆப்செண்ட் என அறிவிப்புவிடைத் தாள்களை திருத்தம் செய்யும் பணிக்கு வந்த ஆசிரியர்களிடம், தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள்களை திருத்தக் கூடாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களை ஆப்செண்ட் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த தேர்வை 10,000 மாணவர்களும் மீண்டும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்த தேர்வுஅதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி``` ``` தொடங்கிய அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மார்ச் மாதம் வரை நடைபெற்று முடிந்துள்ளது. காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்ற தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

``` ```

No comments:

Post a Comment