1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு: கல்வித் துறை தகவல் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, March 6, 2022

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு: கல்வித் துறை தகவல்

 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு: கல்வித் துறை தகவல்

 

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம்.

அதனால் 1 முதல் 5-ம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. மற்ற வகுப்பு ``` ```மாணவர்களுக்கு தேர்வுத் துறை மூலமாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மே 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் அனைத்து கல்விசார் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு, மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி வரை கோடைவிடுமுறை விடப்படும். விடுமுறை முடிந்து 2022-23 கல்வி ஆண்டுக்காக ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்..

No comments:

Post a Comment