சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-21- முன்மொழிதல் - உயர் கல்வித் துறையின் கடிதம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 24, 2022

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-21- முன்மொழிதல் - உயர் கல்வித் துறையின் கடிதம்

  உயர் கல்வித் துறையின் கடிதம்

 

பள்ளிக் கல்வித் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம்!


தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும் , ஊக்கப்படுத்தவும் ``` ```, அதன் ஊடாக மாணாக்கர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும் , அறிவியல் நகரம் 2018-19 - ஆம் ஆண்டு முதல் “ சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது ” -களை வழங்கி வருகிறது.


 இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ .25,000 / க்கான காசோலை ( ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும் ) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

இவ்விருதிற்கு கீழ்க்கண்ட ஐந்து பாடப்பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது : 


1. கணிதம் 

2.இயற்பியல் 

3.வேதியியல் 

4. உயிரியல் மற்றும் 

5.புவியியல் / கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள்


இவற்றுள் ஐந்து விருதுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் ஐந்து விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்க தொடர்பான விதிகள் ஆகியவைகளை www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


2020-21-ஆம் ஆண்டிற்கான “சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது” வழங்க ஏதுவாக மேல்குறிப்பிட்டுள்ள ஐந்து வகைப் பாடப்பிரிவுகளில், ``` ```பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தலைமைஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆணையர், பள்ளிக்கல்வித் துறை வழியாக அறிவியல் நகரத்திற்கு 07.03.2022 மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment