Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை ஜனவரி 18, 2022 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, January 17, 2022

Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை ஜனவரி 18, 2022

 


பிலவ வருடம் தை 5 ஆம் தேதி ஜனவரி 18, 2022 செவ்வாய்கிழமை, பிரதமைத் திதி. பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.இன்று தைப்பூசம், முருகன் சிவ ஆலயங்களில் வழிபட நல்ல நாள்.மேஷம்சந்திரன் இன்றைய தினம் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.ரிஷபம்சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.மிதுனம்சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செய்திகள் வீடு தேடி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் செல்வீர்கள். பயணங்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.கடகம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். உறவினர்கள் வருகையால் நன்மைகள் நடைபெறும்.சிம்மம்சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.கன்னிசந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.துலாம்சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.விருச்சிகம்சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனச்சோர்வும் உடல் சோர்வும் நீங்கி நன்மைகள் நடைபெறும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மைகள் நடைபெறும்.தனுசுசந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சை குறைத்து மவுன விரதம் இருப்பது நல்லது.மகரம்சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.கும்பம்சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும். சுப செய்திகள் வீடு தேடி வரும்.மீனம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவர்களால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment