ஆன்லைன் வகுப்பா? புரியுதா? மாணவரிடம் முதல்வர் கேள்வி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 7, 2022

ஆன்லைன் வகுப்பா? புரியுதா? மாணவரிடம் முதல்வர் கேள்வி


 சென்னை மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.மாமல்லபுரம் ஈசிஆரில் முதல்வர் சைக்கிள் பயணம்.. ஆன்லைன் வகுப்பா? புரியுதா? மாணவரிடம் ஸ்டாலின் கேள்விமுதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்.இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகும். செய்திகளை கேட்டுக் கொண்டே முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வார். பிசியிலும் உடற்பயிற்சிமுதல்வரான பிறகும் அத்தனை பிசியிலும் தனது உடற்பயிற்சியை விடாமல் செய்து வருகிறார். இவர் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என நெட்டிசன்கள் சொல்வதுண்டு. அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் வாரத்திற்கு இரு முறை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.தேனீர் கடைமுட்டுக்காடு, ஈசிஆர் சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் அதற்கான உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிளில் செல்கிறார். ஆங்காங்கே பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து செல்பியும் எடுத்துக் கொள்கிறார். பயணத்தின் போது மாமல்லபுரம் சாலையில் உள்ள தேனீர் கடைகளில் தேனீர் அருந்துவார்.குறைகளை கேட்டறிந்த முதல்வர்முட்டுக்காட்டில் ஒரு முறை சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்த போது அவருடன் பொதுமக்களும் டீ குடித்தனர். அந்த வகையில் இன்றைய தினம் அவர் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.முதல்வர் சைக்கிள் பயணம்அங்கிருந்த ஒரு கடையில் டீகுடித்துவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பள்ளி மாணவரிடம் பேசினார். ஆன்லைன் வகுப்பில் படிக்கிறாயா, எந்த பள்ளி, ஆன்லைன் வகுப்பு புரிகிறதா, என்ன வகுப்பு, பெயர் என்ன போன்றவற்றை கேட்டார். பின்னர் நன்றாக படிக்க வேண்டும் என அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கினார்.

No comments:

Post a Comment