ஓமிக்ரான் பரவல் மோசம்.. என்ன செய்தால் சமாளிக்கலாம்.. இந்தியா தயாரா? சவுமியா சுவாமிநாதன் வார்னிங் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, January 1, 2022

ஓமிக்ரான் பரவல் மோசம்.. என்ன செய்தால் சமாளிக்கலாம்.. இந்தியா தயாரா? சவுமியா சுவாமிநாதன் வார்னிங்

 


ஓமிக்ரான் குறித்த அச்சம் பொது மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்,மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த உலகை மீண்டும் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது உருமாறிய ஓமிக்ரான் கொரோனா. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா ஏற்கனவே பல நாடுகளுக்குப் பரவியுள்ளது.இந்தியாவில் இதுவரை 1431 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேருக்கும் டெல்லியில் 351 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.'ஓமிக்ரான்நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் 3ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 118 ஓமிக்ரான் கேஸ்கள் உறுதியாகியுள்ளது. ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஓமிக்ரான் கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.மின்னல் வேகம்இது தொடர்பாகச் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், "ஓமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் மருத்துவ தேவைகள் திடீரென அதிகரிப்பதே இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஓமிக்ரான் பரவல் நாட்டில் மிக வேகமாக இருக்கும். குறைவான நாட்களில் பலரும் பாதிக்கப்படுவார்கள். உலகெங்கும் இதேநிலை தான். ஓமிக்ரான் காரணமாகவே உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது..அச்சம்இதனால் உலகின் பல நாடுகளிலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சாதாரண சிகிச்சை முதல் ஐசியுக்கள் வரை அனைத்து மருத்துவ தேவைகளும் அதிகரித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மக்கள் மருத்துவரிடம் செல்ல விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு அச்சம் உணர்வைப் போக்க இது தேவை. அதற்கு நாம் தாயாராக வேண்டும்.என்ன செய்யலாம்ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில், இதைச் சமாளிக்க நமக்கு ஒரு திட்டம் தேவை. டெலிஹெல்த் மற்றும் டெலிமெடிசின் சேவைகளை இப்போது நாம் அதிகரிக்க வேண்டும். கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்படாத நோயாளிகளுக்கு முடிந்தவரை வீட்டிலேயே அல்லது தனிமைப்படுத்தல் மையங்களிலேயே சிகிச்சை அளிக்கலாம். அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவையில்லை என்றால் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரத் தேவையில்லை.என்ன பிரச்சினைஓமிக்ரான் பரவலால் இந்த ஐசியு மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளில் பாதிப்பு மோசமாக இருக்காது. மாறாக வீடுகளில் தனிமையில் இருப்போர் லேசான பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகரிக்கும். அதேநேரம் அனைவருக்கும் இதே லேசான பாதிப்பைத் தான் ஏற்படுத்தும் என்று நம்மால் கூறிவிட முடியாது. எனவே, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதைச் சாதாரண காய்ச்சல் என்று பொதுமக்கள் நினைத்துவிடக் கூடாது.உலக நாடுகள்தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் இருந்து ஓமிக்ரான் பரவல் குறித்து தகவல்கள் நமக்குக் கிடைத்து வருகிறது. டெல்டா உள்ளிட்ட மற்ற வகை கொரோனாவை காட்டிலும் இது 4 மடங்கு வேகமாகப் பரவுகிறது. அதேபோல நான்கில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இது குறைவாகத் தெரிந்தாலும் அதிகப்படியான நபர்களுக்கு வைரஸ் பரவும் போது, மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்கும். இதைத் தடுக்க முடியாது. இதை எதிர்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்

No comments:

Post a Comment