MBBS BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கியது...ஜனவரி 7ம் தேதி கடைசி நாள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, December 19, 2021

MBBS BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கியது...ஜனவரி 7ம் தேதி கடைசி நாள்

 

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் எனப்படும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..... என்ற இணையதளத்தில் 2022ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட இணையதளத்தையே பார்த்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மருத்துவ இயக்குநரகம் தெரிவித்துள்ளது.!நீட் முடிவுகள் வெளியீடுகொரோனோ அச்சம் காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை தமிழகத்தில் 18 நகரங்களில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுதினர்.எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நீட் நடத்தப்படுகிறது. வழக்கமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நீட் தேர்வு கொரோனா பரவலால் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனாலும் மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கட்ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர். இதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 15% இடங்களுக்கான கலந்தாய்வ, மருத்துவ ஆலோசனை குழுவும், 85% இடங்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் கலந்தாய்வை நடத்துகின்றனர்.ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்இந்நிலையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு .... என்ற இணையதளத்தில் இன்று முதல் 2022ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 7ம் தேதி வரை அவகாசம் உள்ளதால் 7.5% இட உள் ஒதுக்கீடு மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மேலும் சந்தேகங்கள் இருப்பின் .... இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்த்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 புதிய அரசு, தனியார் நிகர்நிலை கல்லூரிகளில் 2,350 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நாட்டிலேயே அதிகபட்சமாக 69 மருத்துவக் கல்லூரிகளில் 10,375 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அரசு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,125 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.போலி முகவர்களை நம்பவேண்டாம்கலந்தாய்வுக்கு பங்கேற்க உள்ள மாணவர்கள் தங்கள் விவரங்களை .. என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு மருத்துவ ஆலோசனைக் குழு (எம்சிசி) ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் இணையதளங்கள் அல்லது முகவர்களை நம்பி தங்களது யூசர்நேம் மற்றும் பார்வேர்டுகளை பகிரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு சம்பந்தப்பட்ட விவரங்களை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே பார்த்து தெரிந்துகொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் முறைமருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் .... என்ற இணையதளத்திற்கு சென்று '' என்பதை கிளிக் செய்யவேண்டும். பின்னர்,2021 என்ற மெனுவை கிளிக் செய்யவேண்டும். அதன் பின்னர் தங்களது யூசர்நேம் பாஸ்வேர்டு மூலம் உள்ளே நுழைந்து தங்களது சுய விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவேண்டும். மாணவர்கள் பூர்த்தி செய்யும்போது தவறான தகவல் ஏதும் அளிக்காமல் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த சந்தேகங்கள் இருக்குமானால் மாணவர்கள் 98842 24648 / 98842 24649 / 98842 24745 / 98842 24746 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம்.

No comments:

Post a Comment