குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: மீட்பு பணிகளில் தமிழக அரசு தீவிரம்.. கோவை விரைகிறார் முதல்வர் ஸ்டாலின் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, December 8, 2021

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: மீட்பு பணிகளில் தமிழக அரசு தீவிரம்.. கோவை விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்

 


குன்னூர் அருகே இந்திய விமானப்படையின் விமானம் நொறுங்கி விழுந்து 7 பேர் பலியான சம்பவத்தில் உரிய மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் ஒரு பகுதியாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று மதியம் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.இதன்பிறகு மருத்துவர் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் நீலகிரி மாவட்ட கலெக்டர் அமரித்தை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தார். எந்த மாதிரி உதவிகள் தேவைப்படும் என்பதை கேட்டறிந்து உரிய ஒத்துழைப்புகளை தமிழக அரசு சார்பில் உடனடியாக எடுக்க வேண்டும் மற்றும் அனைத்து வகை உதவிகளையும் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவிட்டார். மீட்பு பணிகள் மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாலை 5 மணிக்கு கோவை விரைகிறார், என்று தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.இதனிடையே, விமானப்படையைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. விபத்து நடைபெற்றது அடர்ந்த வனப்பகுதி என்பதால் சுமார் ஒரு மணிநேரம் ஹெலிகாப்டர் மற்றும் அதை சுற்றியுள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. தற்போது அந்த இடம் முழுவதையும், ராணுவம், தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.

No comments:

Post a Comment