இதயத்தை பாதுகாக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 3, 2021

இதயத்தை பாதுகாக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு

 கொலசுட்ரால் (Cholesterol) என்பது உயிரணு மென்சவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள ஸ்டெராய்டு எனப்படும் ஒரு வகை கொழுப்புப் பொருள் ஆகும், இது அனைத்து விலங்குகளில் இரத்தத்தில் கலந்து அனைத்து உடல் பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்றது.


20 வயதுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொழுப்புச் சோதனை செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க இதயச் சங்கம் பரிந்துரைக்கிறது

12 மணி நேரம் உணவருந்தாமல் இருந்த பிறகு எடுக்கப்பட்ட இரத்த மாதிரி, மருத்துவரால் சோதிக்கப்பட்டோ அல்லது வீட்டிலேயே கொழுப்புத் புரத விவரங்களைக் கண்டறியும், கொழுப்புச் சோதனைக் கருவிகளின் மூலமோ சோதித்தறியலாம். இதில் மொத்த கொழுப்பு, LDL (தீய) கொழுப்பு, HDL (நல்ல) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். 200 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக மொத்த கொழுப்பு அளவு உடைய, 45 வயதுக்கு மேற்பட்ட ஆணாகவோ அல்லது 50 வயதுக்கு மெற்பட்ட பெண்ணாகவோ இருப்பவர்கள், HDL (நல்ல) கொழுப்பின் அளவு 40 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அல்லது மற்ற இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்புக் காரணிகள் உடையவர்கள் போன்றோர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லாமல் அடிக்கடி கொழுப்புச் சோதனை செய்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

ஹோல் க்ரைன்ஸ் எனப்படும் ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது.

பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை. இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை.

பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப்பொருட்கள் இவை.

பூண்டில் இருக்கும் மருத்துவகுணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள், உடலில் காணப்படும் கொழுப்புப்புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது

No comments:

Post a Comment