ஓமிக்ரான் அச்சுறுத்தலால் தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு வருமா ?: அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்!! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, December 1, 2021

ஓமிக்ரான் அச்சுறுத்தலால் தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு வருமா ?: அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்!!


 

full

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கிற்கான தேவையை இருக்காது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை, திருச்சி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், மதுரையில் விமான நிலையத்தில் ஓமிக்ரான் பரிசோதனையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் யாருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார்.


மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு விமான நிலையத்தில் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் 78% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் தாமாக முன்வர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், 11 நாடுகளில் இருந்து வந்த 477 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் சோதனை நடத்தியதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.ஓமிக்ரான் பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் 2% பரிசோதனை நடத்தப்படுகிறது,என்றார்

No comments:

Post a Comment