ஆன்லைனில் இலவசமாக தமிழ் கல்வி.. பெங்களூர் தமிழ் அறக்கட்டளை ஏற்பாடு.. முந்துவோருக்கு முன்னுரிமை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 30, 2021

ஆன்லைனில் இலவசமாக தமிழ் கல்வி.. பெங்களூர் தமிழ் அறக்கட்டளை ஏற்பாடு.. முந்துவோருக்கு முன்னுரிமை

 

பெங்களூர் தமிழ் அறக்கட்டளை நடத்தும், ஆன்லைன் அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு படி நிலை-1, டிசம்பர் மாதம் 1ம் தேதி துவங்குகிறது.தமிழ் அறக்கட்டளை-பெங்களூர், உலகெங்கிலும் உள்ள தொலைதூரத் தமிழர்களுக்குப் பயனளிக்கும் வகையில், நன்கு வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் முறை மூலம் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.வெறும் 30 நாட்களில் அடிப்படை தமிழ் அறிவை வழங்கும் நோக்குடன், இந்தாண்டு மே 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இது தமிழ் அறிஞர் பொள்ளாச்சி நேசனால் கட்டமைக்கப்பட்ட பாட திட்டமாகும்.இந்த நிலையில், 2021ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 30 வரை அடிப்படை தமிழ் கற்றல் வகுப்பு-நிலை-1 தொடங்க உள்ளது. இது 8வது பேட்ஜ் ஆகும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வியின் சிறப்பம்சங்கள் இவைதான்:• தமிழறிஞர் பொள்ளாச்சி நாசன் வடிவமைத்த பாடத்திட்டம்• வகுப்பு ஜூம் ஆப் மூலம் நடைபெறும்.• வகுப்பு நேரம்: தினமும் மாலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை• சனி, ஞாயிறு விடுமுறை• பயிற்றுவிக்கும் மொழி தமில்.• கற்றலுடன் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் பயனுள்ள பாடல்கள்• தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு முன்னுரிமை• பாட வகுப்புக்கு கட்டணம் கிடையாது, முற்றிலும் இலவசம்.• முதல் 100 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.• தன்னார்வ நன்கொடைகளை தமிழ் அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். வங்கி மூலம் பணம் செலுத்த விரும்புவோர் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.• சேர்க்கை 30.11.2021க்கு முடிவடைகிறது.•முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி• வினவலுக்கும் தொடர்பு கொள்ளவும்:தமிழ் அறக்கட்டளை, பெங்களூருஎஸ்.குமணராசன், தலைவர்ஏ.தனஞ்செயன், செயலாளர்

முத்துமணி நன்னன், பொருளாளர்
மொபைல்: 9483755974, 6363118988, 9820281623
• மின்னஞ்சல்: tamilfoundationblr@gmail.com
• பதிவு செய்ய, கிளிக் செய்யவும்: https://forms.gle/VBpoNdVL1ZQnUxtD9

No comments:

Post a Comment