எந்த தவறையும் செய்யவில்லை.. என்னை ஏன் தவறாக நினைக்கிறீர்கள்?.. தற்கொலை கடிதத்தில் கரூர் ஆசிரியர் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 24, 2021

எந்த தவறையும் செய்யவில்லை.. என்னை ஏன் தவறாக நினைக்கிறீர்கள்?.. தற்கொலை கடிதத்தில் கரூர் ஆசிரியர்

 நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை எல்லாரும் தவறாக நினைக்கிறார்கள் என கரூர் பள்ளி ஆசிரியர் சரவணன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சரவணன்(44). இவருடைய மனைவி ஜெயந்தி (42). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.கரூரில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி பயின்ற தனியார் பள்ளியில் சரவணன் கணித பாட ஆசிரியராக பணியாற்றினார். இவர் பள்ளியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு நேற்று (நவ. 24) மாலை துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் நடராஜன் வீட்டுக்கு தனியாக வந்துள்ளார். என்ன நடந்தாலும் அன்றாட வேலையை தூக்கிட்டு தற்கொலைஅங்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான தகவலின் பேரில் துறையூர் போலீஸார் நேரில் சென்று சரவணனின் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.முசிறிமேலும் இது தொடர்பாக துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தகவலறிந்து முசிறி டிஎஸ்பி அருள்மணி நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 19 கரூரில் தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக யார் பெயரையும் குறிப்பிடாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவி தற்கொலைஇதுகுறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். . ஆசிரியர் சரவணன் டைரியில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.ஏன் இப்படி கூறுகிறார்கள்அந்த கடிதத்தில் ஜெயந்தி (மனைவி) என்னை மன்னித்துவிடு. அனைவரும் என்னை தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசைப்படவில்லை. இன்று காலை (நேற்று) வந்தவுடன் மாணவர் ஒருவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறையும் செய்யவில்லை. என்னை எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள். ஏன் இப்படி கூறுகிறார்கள் என தெரியவில்லை. நான் கோபத்தில் மாணவர்களை திட்டியுள்ளேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என சரவணன் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில் அம்மா உங்களை விட்டு போகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவியின் தாய் வேதியியல் ஆசிரியர்தான் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பார் என கூறிய நிலையில் தற்போது கணித ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment