ஓமிக்ரான் பரபரப்பு.. தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு? கலெக்டர்களுடன், இறையன்பு ஆலோசனை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 28, 2021

ஓமிக்ரான் பரபரப்பு.. தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு? கலெக்டர்களுடன், இறையன்பு ஆலோசனை


சென்னை: புதிய வகை, உருமாறிய ஓமிக்ரான் என்ற கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார்.தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்குமா என்பது இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.சுமார் 32 வகைகளில் உருமாற்றம் அடையக் கூடியது ஓமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஆகும். போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் வைரஸ் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. எச்சரிக்கைஏற்கனவே, இந்த புதிய வகை வைரஸ் பல நாடுகளிலும் பரவி இருக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஏற்கனவே பரவிய டெல்டா வகை வைரசை விட மிக மோசமாக பரவும் வைரஸ் இந்த புதிய வகை வைரஸ் ஓமிக்ரான் என்பதால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்து இருக்கின்றன.ஊரடங்கு தளர்வுகள்தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஊரடங்கு உத்தரவு கிட்டத்தட்ட இல்லாத நிலைதான். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மாணவ, மாணவிகள் அருகே அமர்ந்தபடி பேருந்துகளில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் படம் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா என்ற ஒன்றே இல்லை என்று நினைக்கும் அளவுக்கு இயல்பு வாழ்க்கையை நடைபெற்று வருகிறது.இறையன்பு ஆலோசனைஇந்த நிலையில்தான், புதிய வகை வைரஸ் காரணமாக பாதிப்பு பயன்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இதில் ஊரடங்கு உத்தரவில், தளர்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதை குறைக்கலாமா புதிதாக எந்த கெடுபிடிகள் கொண்டுவரலாம் எந்த மாதிரி நடவடிக்கை எடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம், இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.உடனடியாக இருக்காதுமக்கள் கிட்டத்தட்ட ஊரடங்கு என்ற ஒன்றை மறந்து விட்டு இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த நிலையில் புதிதாக பரவியுள்ள வைரஸ் பாதிப்பு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உடனடியாக ஊரடங்கு கெடுபிடி வராது என்ற போதிலும் இன்றைய கூட்டத்தில் விதாகிக்கப்பட்ட தகவல்கள் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். முதல்வர், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகள் போன்ற எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு கிடையாது என்பதுதான் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment